1926.09.28 ஆம் நாள் யாழ்ப்பாணம் -அளவெட்டி ஐயனார் கோயிலடி என்னும் இடத்தில் பிறந்தவர். சிற்பம், ஓவியம், இசை, ஆடற்கலை, விசகடி வைத்தியம் போன்ற கலைகளில் ஆற்றலுடைய வராயினும் ஆடற்கலையில் அதிக நாட்டம் கொண்ட இவர் தான் கற்பித்த பாடசாலைகளில் மாணவர்களைக்கொண்டு பல ஆடல் நாடகங்களைத் தயாரித்தளித்துள்ளார். பாம்பு போன்ற வி~யந்துக்களால் கடியுற்றோருக்கு வைத்தியம் செய்து குணப்படுத்துவதில் நிபுணத்துவமுடையவர். இத்தகைய இவரது பணிகளால் அருட்கலை மணி என்ற விருது வழங்கிக் கௌர விக்கப்பெற்றவர். 1989.09.29 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.