யாழ்ப்பாணம்- இணுவில் என்னுமிடத்தில் 1958.01.15ஆம் நாள் பிறந்தவர்.சிறந்த தவிற் கலைஞரான இவர் ஆலயங்களிலும் யாழ்ப்பாண மக்களினது இல்லங்களிலும்; நடைபெறுகின்ற சுபகாரியங்களிலும் பாராட்டத்தக்க வகையில் தவில் வாசித்துப் பெருமைபெற்றவர். லயஞானமணி,லயஞானரத்தினம் போன்ற விருதுகள் வழங்கப்பெற்றவர். 2007.10.18 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.