1968.01.14 ஆம் நாள் தெல்லிப்பளை -மல்லாகம் என்னும் இடத்தில் பிறந்தவர். மல்லாகம் வெங்கடாசலம் இராசரத்தினம் அவர்களுடைய புதல்வியாவார். தந்தையாரிடம் ஆடற் கலையினை ஐயந்திரிபுறக்கற்று மல்லாகத்தில் கலாலயம் என்றபெயரில் ஆடற்கலை நிறுவனம் ஒன்றினை ஆரம்பித்து ஆடற்கலைப் பயிற்சிகளை வழங்கியவர். 1991.05.16 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.