1945.06.20 அம் நாள் அளவெட்டி -கும்பழாவளை என்ற ஊரில் பிறந்தவர். பாடசாலையில் படிக்கின்ற காலத்திலேயே பண்ணிசைப் போட்டிகளில் பல தங்கப் பதக்கங்களைப் பரிசாகப் பெற்றவர். கும்பழாவளைப் பிள்ளையாராலய பிரதம குருவாகப் பணிபுரிந்ததுடன், பண்ணிசையிலும் புராணபடனங்கள் ஓதுவதிலும் திறமை வாய்ந்தவர். 2004.03.05 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.