1822.01.13 ஆம் நாள் யாழ்ப்பாணம் -கொக்குவில் என்ற இடத்தில் பிறந்தவர். ஆடற்கலையில் அரச நியமனம் பெற்ற முதலாவது நிருத்தியக்கலைஞன். யாழ்ப்பாணத்தில் பெண்கள் ஆடற்கலையினைப் பயிலவும், அதில் ஈடுபடவும் வழி ஏற்படுத்தியவர் என்பதுடன் ஆடற்கலைப் பாரம்பரியத்தினையும் உருவாக்கியவர். இத்துறையில் இவரது சேவையினைப் பாராட்டி கலைச்செல்வன் என்ற விருது வழங்கி பெருமைப்படுத்தப்பட்டவர். 1976.01.11 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.