யாழ்ப்பாணம்- பருத்தித்துறை என்னுமிடத்தில் 1941.02.01 ஆம் நாள் பிறந்தவர். சிறந்த தவிற் கலைஞரான இவர் ஆலயங்ளிலும் யாழ்ப்பாண மக்களினது இல்லங்களிலும் நடைபெறுகின்ற சுபகாரியங்களிலும் பாராட்டத்தக்க வகையில் தவில் வாசித்துப் பெருமை பெற்றவர். 2008.04.24 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.