யாழ்ப்பாணம் -அளவெட்டி என்னுமிடத்தில் 1041.03.06 ஆம் நாள் பிறந்தவர். சிறந்த தவிற் கலைஞரான இவர் பல தவிற்கலைஞர்களை உருவாக்கியதோடு மட்டுமல்லாமல், தனது தலைமை யில் தவிற் குழுக்களை அமைத்து ஆலயங்களிலும் யாழ்ப்பாண மக்களினது இல்லங்களிலும் நடைபெறுகின்ற சுபகாரியங்களிலும் பாராட்டத்தக்க வகையில் தவில் வாசித்துப் பெருமை பெற்றவர். இவரது வாசிப்பானது லயநாத, சுருதி பிசகாத சங்கதிகள் நிறைந்ததாக இருக்குமென இவரது ரசிகர்களால் குறிப்பிட்டுப் பேசப்பட்டமை கண்கூடு. 1996.10.05 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.