Sunday, October 6

குமரகுரு நாகலிங்கபிள்ளை

0

1934.07.17ஆம் நாள் அளவெட்டி என்னும் இடத்தில் பிறந்தவர். தந்தையாரான நாகலிங்கபிள்ளையை முதற்குருவாகக் கொண்டு தவிற்கலையைப் பயின்றவர். பின்னர் பிரபல தவில்மேதையான வலங்கைமான் சண்முகசுந்தரம்பிள்ளையின் தந்தையாராகிய மூளாய் ஆறுமுகம்பிள்ளையை பிரதம குருவாகக் கொண்டு ஞானம்பெற்றவர். என்.கே. பத்மநாதனுடன் இணைந்து இலங்கை மட்டுமல்லாது, இங்கிலாந்திலும் பின்னர் பல உலகநாடுகளிலும் தவில் விற்பன்னராகப் புகழ் பெற்றவர். இவற்றுடன் பல வயலின் வாத்திய தனிக்கச்சேரியில் கெஞ்சிரா வாசித்துப் பெருமை பெற்றவர். தனது பிள்ளைகளில் மூத்த புதல்வனை நாதஸ்வரக்கலையிலும், இளைய புதல்வனை தவிற்கலையிலும் பயிற்றுவித்து கலையுலகிற்கு அறிமுகம் செய்துள்ளமையும், ஒரு பெரிய சீடப் பரம்பரையையும் உருவாக்கிய பெருமையும் இவருக்குண்டு. இசையுலகில் முதல் வரிசையிலிருக்கும் இளம் தவிற் கலைஞர்களான த. உதயசங்கர், எஸ்.சுகுமார், கானமூர்த்தி, கண்ணதாசன், கனடாவிலிருக்கும் மனோகரன் என்போர் இவரால் உருவாக்கப்பெற்ற பரம்பரையினர் என்று குறிப்பிடுவது இவரது கலைச்சேவையின் உந்நத ஆற்றலை வெளிப்படுத்தி நிற்கின்றது என்பதில் ஐயமில்லை. லயஞானகலாநிதி என்ற விருதும் 1993 இல் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கலாபூஷணம் விருதும் வழங்கப்பெற்றவர். 2007.09.26 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!