யாழ்ப்பாணத்திற்கு செட்டிமாரால் தமிழகத்திலிருந்து அழைத்து வரப்பட்ட பெண் நடனக்குழுக்களில் முக்கியமானவர். இவர் தனது நடன அளிக்கையின் மூலம் யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்று யாழ்ப் பாணத்திலேயே நிரந்தரமாகத் தங்கி வாழ்ந்தவர். பெண்கள் அரங்கில் தோன்றி நடனமாடுவதனை இழிவாகப் பேசிய காலத்தில் நடனக்கலையினை இந்து ஆலய இரவுத் திருவிழாக்களில் கலை நிகழ்ச்சிகளாக அமையும் இவருடைய குழுவினர் புராண, இதிகாசக் கதைகளைத் தழுவியதாக ஆடல் இடம்பெறுவது வழக்கம். இவ்வாடற்கலைகளில் பிரதான பாத்திரங்களையேற்று அரங்கில் சாதனை படைத்தவர். இன்று இவர்களது செயற்பாடுகளை உயர்வான ஆய்வு முயற்சிகளின் ஆய்வுப் பொருளாகவும் பயன்படுத்துவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத் தக்கது.