1924-05-19 ஆம் நாள் யாழ்ப்பாணம்- 74{3, கடற்கரை வீதி, நாவாந்துறை என்ற இடத்தில் பிறந்தவர். தனது ஒன்பதாவது வயதில் நாட்டுக்கூத்தினைப் பாட ஆரம்பித்த இவர் 25இற்கு மேற்பட்ட கூத்துக்களை எழுதியதுடன், 55இற்கு மேற்பட்ட கூத்துக்களில் நடித்ததுடன் அண்ணாவியாராகவும் பணியாற்றியவர். தானியேல், யுவானியார், அசீசியஸ், பாரபரம்மாள், பாவிகளைத்தேடி, ஏழையின் கண்ணீர், நீக்கிலார் வேளாங்கன்னி, யூதகுமாரன், புதுவாழ்வு, ஞானசௌந்தரி, அரிச்சந்திரன் போன்ற சில கூத்துக்கள் இவரால் நெறிப்படுத்தப் பட்டனவாகும். நாட்டுக் கூத்துப் பாடல்களுடன் கர்நாடக இசையையும் இணைத்து புதிய மெருகூட்டி புதிய இராகங்களைப்பாடி சாதனை புரிந்தவர்.இவரது கலைச்சேவையினைப் பாராட்டி கலை நிறுவனங்களாலும், பெரியார்களாலும் பொன்னாடை போர்த்தியும், விருதுகள் வழங்கியும் கௌரவிக்கப்பெற்றவர். இசைக்குரிசில், இசைத்திலகம் போன்ற விருதுகள் குறிப்பிடத்தக்கன. 2009.04.01 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.