தோளகட்டி, வசாவிளானில் பிற்ந்த இக் கலைஞன் சுண்டுக்குளி மத்தியூஸ் வீதியில் வாழ்ந்தவர். நாட்டுக்கூத்து அண்ணாவியாராக செயற்பட்ட இவர் இக் கலையில் மிகுந்த ஈடுபாடுடையவராகவும் பாடசாலை மாணவர்களுக்கும் மத்தியூஸ் கிறின்கிங்ஸ் நிலையத்தினூடாவும் கூத்தினை அடுத்த சந்ததியினருக்கு கையளித்தவர்.இவர் எலிசபெத்தம்மாள், பாலசூரன்,கண்டியரசன், எஸ்த்தாக்கியார், கற்பலங்காரி, ஞானசௌந்தரி, மத்தேயு மவுறம்மா, செபஸ்தியார், நொண்டி போன்ற கூத்துக்களில் நடித்துப் புகழ்பெற்றவர்.2002-03-01 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.