1890-07-07 ஆம் நாள் யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை மல்லாகம் என்னும் இடத்தில் பிறந்த பரம்பரைக் கலைஞரான இவர் நாட்டுக்கூத்து, ஆர்மோனியம்,மிருதங்கம் ஆகிய கலைகளில் ஆற்றலுடையவர். கத்தோலிக்கப் பாரம்பரியமுடைய கூத்துக்களை நடித்தும் அரங்கேற்றியும் கூத்துக்கலையின் வளர்ச்சியில் கால்பதித்தவர். நீண்டகாலம் திருகோணமலையில் வாழ்ந்தமையால் திருமலையிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் பிரபல்யம் பெற்றிருந்தவர். ஞானசவுந்தரி, கருங்குயில் குன்றம், எஸ்தாக்கியர், புனித பிலோமினால் போன்ற கூத்துக்களின் அண்ணாவியாராகச் செயற்பட்டு மேடையேற்றியவர். இவர் பாரம்பரியத்தில் வந்தவர் தான் இன்றைய நாடக சிற்பக்கலைஞன் ஏ.வி.ஆனந்தன் என்பது குறிப்பிடத்தக்கது.1970 ஆம் ஆண்டு வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.