Wednesday, February 12

பாக்கியராசாத்தி மனுவல் (அன்னம்மா)

0

1923 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – பாஷையூர் என்ற இடத்தில் பிறந்தவர். யாழ்ப்பாணத்தில் தென்மோடிக் கூத்திலேயே முதன் முதலில் பெண்கள் அரங்கில் நடிக்கும் பாரம்பரியம் உருவாகியது. அடக்கி வைத்திருந்த தமது ஆளுமைகளை வெளியே கொணர்ந்த பெண்களில் பாi~யூர் மனுவல் பாக்கியராசாத்தி என்பவர் முதன்மையானவர். 1955 ஆம் ஆண்டளவில் தனது கலைப்பணியை ஆரம்பித்தவர். 1967 இல் திருநீலகண்டன் என்ற கூத்தினை எழுதி 28 சதம் நுழைவுச் சீட்டிற்கு அரங்கேற்றினார். இதனால் தனது குடும்பத்துடன் முரண்பட்டு பிரச்சினைக்குள்ளானதாகத் தகவல்கள் கூறுகின்றன. மேலும் துதிப்பாடல்கள், நடசாதிப் பாடல்கள், ஆலயப் பாடல்கள் மடுமாதா, மண்ணித்தலை, கிளாலி சந்தியோகுமையோ போன்ற ஆலயங்கள் மீது பாடியவர். இக்கலைஞர் பாi~யூரில் தலைசிறந்த அண்ணாவியார்களான பிலிப்பையா, அல்பிறட், நெல்சன் போன்றவர் களுடன் இணைந்து செயற்பட்ட பெருமைக்குரியவர். திருநீலகண்டர், ஞானசௌந்தரி, சமர்க்களவீரன் சந்தியோகுமையோ, சிரங்கேட்டசிங்காரி போன்றன இவரால் எழுதப்பெற்று நெறிப்படுத்தப்பட்ட கூத்துக்களில் சிலவாகும். 2004 ஆம் ஆண்டு வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!