1930-06-20 ஆம் நாள் வடமராட்சி கிழக்கு – செம்பியன்பற்று வடக்கு என்ற இடத்தில் பிறந்தவர்.தென்மோடிக் கூத்துக் கலையில் அண்ணாவியாராகவும், நடிகராகவும் பங்காற்றியதுடன் இத்துறையில் பல கலைஞர்களையும் உருவாக்கியவர். எஸ்த்தாக்கியர், விஜயமனோகரன், ஞானசௌந்தரி, சங்கிலியன், கற்பலங்காதல், கற்பலங்காரி, ஊசோன்பாலந்தை, அந்தோனியார், கிறிஸ்தோப்பர், மத்தேயுமவுறம்மா, செபஸ்தியார், ஞானசீலன், சவேரியார் போன்ற கூத்துக்களிலும் பராசக்தி வரலாற்று நாடகத்திலும் நடித்தவர். 1994.11.14 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.