யாழ்ப்பாணம்- கொழும்புத்துறை என்னுமிடத்தில் பிறந்தவர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் அண்ணாவியார்களில் குறிப்பிடத்தக்கவராகவும் சிறந்த நடிகையாகவும் திகழும் இவர் பல்வேறு கத்தோலிக்கக் கூத்துக்களை அரங்கேற்றியவர். எஸ்தாக்கியர், லெனோவா, மத்தேஸ்மவுறம்மா ஆகிய கூத்துக்கள் அவரது கலைச்செயற்பாட்டினை நாடறிய வைத்தது எனலாம். திருமறைக் கலாமன்றம் இவருடைய கலைச்செயற்பாட்டினை மதிப்பளிக்கும் வகையில் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.