1937.12.10 ஆம் நாள் சில்லாலை என்ற இடத்தில் பிறந்தவர். நாடகம், நாட்டுக்கூத்து ஆகிய கலைகளில் தேர்ச்சியுடைய இவர் 1950 ஆம் ஆண்டில் கலைத்துறையில் புகுந்து இறக்கும்வரை கலைக்காக வாழ்ந்தவர். திருஞானதீபன், விஜயமனோகரன், சங்கிலியன், எஸ்தாக்கியர், தேவசகா யம்பிள்ளை, ஊசோன்பாலந்தை, ஜனகப்பு, மனம்போல் மாங்கல்யம், நொண்டி போன்ற பல கூத்துக் களில் முறையே தந்திரசூரி, ஆஞ்சலோ அரசன், பரராசசேகர மன்னனின் தளபதி, இளையமகன், பிராமணன், தளபதி, நொண்டி என்கின்ற பாத்திரங்களேற்று நடித்து பலரதும் பாராட்டினையும் பெற்றவர். இவருடைய கலைச்சேவைக்காக கலாசார அலுவல்கள் திணைக்களம் கலாபூ~ணம் விருதினை வழங்கிக் கௌரவத்தமை குறிப்பிடத்தக்கது. 2013 ஆம் ஆண்டு வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.