1928-04-10 ஆம் நாள் யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை கோயில் வளவு என்னும் இடத்தில் பிறந்தவர். தாளக்காவடி, ஆடல், கும்மி, நாடகம் ஆகியவற்றுடன் மிருதங்கம், ஆர்மோனியம் வாசிப்பதிலும் ஆற்றல் பெற்றவர். நாட்டுக்கூத்து அண்ணாவியாராக விருந்து பல கூத்துக்களை அரங்கேற்றியவர். இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கலைஞானகேசரி, வலிகாமம் வடக்கு கலாசாரப்பேரவையின் கலைச்சுடர்விருதும் வழங்கப்பெற்ற கலைஞன். 2006.06.11 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.