1943-08-08 ஆம் நாள் யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை சிந்துபுரம் என்னுமிடத்தில் பிறந்தவர். 1956 ஆம் ஆண்டு முதல் கலைவாழ்வை ஆரம்பித்து வட்டுக்கோட்டை நாட்டுக்கூத்து அபிவிருத்திக் குழுவின் பல்வேறு கலைச் செயற்பாடுகளிலும் பங்காற்றியவர். இவருடைய கலைச்சேவைக்கு மதிப்பளிக்கும் வகையில் நடிகவேள், நடிகமணி ஆகிய கௌரவ விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பெற்றவர்.