1894-04-12 ஆம் நாள் யாழ்ப்பாணம் – குருநகர் என்ற இடத்தில் பிறந்தவர். அண்ணாவியாரான இவர் தர்மப்பிரகாசம், ஜெயசீலன், அலங்காரரூபன், மூவிராசாக்கள், விஜயமனோகரன் போன்ற கூத்துக்களை அரங்கேற்றியதோடு யூதகுமாரன், கற்பலங்காரி, தேவசகாயம்பிள்ளை, கருங்குயில் குன்றத்துக்கொலை, ஞான சௌந்தரி போன்ற கூத்துக்களில் நடித்தவர். 1976-10-13 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.