Saturday, January 4

சிவராமலிங்கம்பிள்ளை, கணபதிப்பிள்ளை

0

1925-09-16 ஆம் நாள் யாழ்.தீபகற்பம்புங்குடுதீவு என்ற இடத்தில் பிறந்து குமாரசாமி வீதி,கந்தர்மடம் யாழ்ப்பாணம் என்ற இடத்தில் வாழ்ந்தவர். இளம்பிள்ளைவாத நோயினால் கால்கள் வலுவிழந்த நிலையில் வாழ்ந்த இவர் தான் கல்வி கற்ற யாழ்.இந்துக் கல்லூரியில் பிரதி அதிபராக பணியாற்றி ஈழத்து இலக்கிய உலகில் பல முன்னணி எழுத்தாளர்களை உருவாக்கிய பெருமைக்குரியவர். விவாதமேடைகளில் நடுவராகவும்.பேச்சாளராகவும் விளங்கிய இவரின் அளப்பெரிய சேவையினால் ஆளுமையுடைய இளைஞர் கூட்டமொன்றினை உருவாக்கி எம்மண்ணில் ஆற்றல்மிகு பேச்சாளர் களாக விளங்கவைத்தவர். சைவசிகாமணி, சித்தாந் தபாரதி, கம்பகாவலர், மகத்தான சேவையாளன் போன்ற கௌரவ விருதுகள் வழங்கப்பெற்றவர். 2005-08-25 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!