Saturday, January 4

இரத்தினம், கதிர்காமு (சந்திரமதி இரத்தினம்)

0

1928-05-16 ஆம் நாள் யாழ்ப்பாணம் – அரியாலை,34ஃ3. கலைமகள் வீதி என்ற இடத்தில் பிறந்தவர். ஈழத்துப் பார்சி அரங்க வரலாற்றில் இவரது பங்களிப்பு மிக முக்கியமானது. பாரம்பரிய அரங்க முறைமைக்குள் நின்று பெண் பாத்திரச் சித்தரிப்பினை கச்சிதமாக வெளிப்படுத்திய கலைஞன். இவரால் நடிக்கப்பெற்ற பெண் பாத்திரங்களில் ஒன்றான சந்திரமதி என்னும் பாத்திரம் இவரை பார்சி அரங்கில் நிலைநிறுத்தியது எனலாம். இதனால் இவரை எல்லோரும் சந்திரமதி இரத்தினம் என்றே அழைக்கலாயினர். 1950களுக்கு பின்னர் அரியாலை ஸ்ரீகலைமகள் நாடக சபா பல பார்சி முறையில மைந்த நாடகங்களை அரங்கேற்றியது. இந்நாடகங்களில் நடித்துப் புகழ் பெற்றவர்களில் இவரும் ஒருவர். “சோகச்சோபிதசொர்ணக்குயில்” எனப்பாராட்டப்பெற்றவர். இலங்கையின் பல பாகங்களிலும் தனது ஆற்றுகையினை நிகழ்த்தி புகழ்பெற்றவர். இவரால் உருவாக்கப்பெற்ற கலைஞர்களாக அமரர்களான வடிவேலு செல்வரத்தினம், ஆர்மோனியச்சக்கரவர்த்தி மு.திருநாவுக்கரசு, இ.கனகரத் தினம், பி.சண்முகலிங்கம் போன்றவர்களைக் குறிப்பிடலாம்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!