1920 ஆம் ஆண்டு சுளிபுரம் தொல்புரம் என்னும் ஊரில் பிறந்தவர். தமிழ்மணி என அழைக்கப்பட்ட இவர் பொருள் நூல் விற்பன்னராவார். தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றியவர்.அண்ணாமலைப் பல்கலைக்கழகக் புலவரான இவர் புறப்பொருள் வெண்பா மாலை எனும் நூலுக்கு உரையெழுதியவர். 1993 ஆம் ஆண்டு வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார். நாடக, உரை நூல்களைத் தந்தவர். சாகித்திய மண்டலப் பரிசினையும் பெற்ற இவர் தென்னிந்திய இலங்கை அறிஞர்களால் பெரிதும் போற்றப்பட்டவர்.