1891-11-19 ஆம் நாள் யாழ்ப்பாணம் – பாஷையூர் என்ற இடத்தில் பிறந்தவர். பல கூத்துக்களைப்பாடியது மட்டுமல்லாமல், இசைநாடகங்களையும் யாத்து நாடக உலகில் பல ஆக்கங்களைத் தந்த புலவர். கவிக்குயில், மதுரகவிப்புலவர் என்பன போன்ற விருதுகள் வழங்கிப் பெருமைப்படுத்தப்பட்டவர். 1969-04-02 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.