1924 ஆம் ஆண்டு அளவெட்டி என்னும் இடத்தில் பிறந்தவர். தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியில் கல்வி கற்ற இவர் மகாஜன மும்மணிகளில் ஒருவர். அ.ந.க, எமிலாசோலா, கவீந்திரன், புருனே என்கின்ற புனைபெயர்களில் கவிதை, கட்டுரை, நாடகம், சிறுகதை, நாவல், இலக்கியவிமரிசனம், மொழிபெயர்ப்பு என ஆக்கப் பணிகளில் தமிழ்மொழிக்குச் சிறப்புச் சேர்த்தவர். இவரது வெற்றியின் இரகசியம் என்னும் நூலும், மதமாற்றம் என்ற நாடகமும், மனக்கண் என்னும் நாவலும் படைப்பின் ஆழத்தை சுட்டி நிற்கின்றன. தமிழிலக்கியத்தின் மறுமலர்ச்சி சங்கத்தின் இணைச்செயலாளராகவும் பணியாற்றிய இவர் 1968 ஆம் ஆண்டு வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.