1921-05-24 ஆம் நாள் யாழ்ப்பாணம்- நாவற்குழி என்ற இடத்தில் பிறந்தவர். உருவகக் கதையின் ஈழத்துப் பிதாமகர் எனப் போற்றப்படுபவர். கூர்மையான அவதானிப்பும், சுவையான வருணனையும், மானிடநேயத்தினைத்தூண்டும் கருத்துக்களும் இவரது படைப்புக்களின் அடிப்படைக் கருப்பொருள் களாக அமைந்திருக்கும் என்பது கண்கூடு. கிடைக்காத பலன், பாற்காவடி, மனிதமிருகம், மண்வாசனை போன்ற சிறுகதைகள் இவரது படைப்பின் ஆழத்தினை எடுத்தியம்புவனவாகும். இலங்கைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொருளாளராகப் பணியாற்றிய இவர் பல பாடநூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இலங்கைப்பாட நூல் வெளியீட்டுத் திணைக்களத்தின் பாடநூல் எழுத்தாளராகவும் பணியாற்றியவர். பண்டிதரான இவர் 2007-06-22 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.