1935-06-08 ஆம் நாள் யாழ்ப்பாணம் – அராலி என்னும் இடத்தில் பிறந்தவர். கலைச்சுடர் இதழ் மற்றும் ஈழநாடு பத்திரிகையினதும் ஆசிரியராகப் பணியாற்றிய இவர் கன்னிப்பெண் என்னும் தலைப்பில் பல சிறுகதைகளை தொடர்ச்சியாக பத்திரிகைகளில் எழுதியவர். இவர் வெறும் இலக்கிய கர்த்தா மட்டுமல்ல கலை வல்லாளரும் கூட. ஓவியம், சிற்பம், நாட்டார் கலைகள் ஆகியவற்றிலும் கைதேர்ந்தவர். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது புரவிநடனம் ஆடி மக்கள் கவனத்தினை தன்பால் ஈர்த்தவர். இவரால் தீட்டப்பட்ட ஓவியங்கள் அந்த நேரத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. கன்னிப்பென், இப்படி எத்தனை நாட்கள் ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும் வெளியிட்டவர். மரபு வழிக்கவிதை எழுதுவதிலும் திறன்மிக்கவரான இவர் 1999-04-09 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம்
சென்றார்.