1915-02-24 ஆம் நாள் தெல்லிப்பளை விழிசிட்டி என்னும் ஊரில் பிறந்தவர். பாடசாலை அதிபராகப்பணியாற்றிய இவர் படைப்பிலக்கியத்துறையிலும், புராண படன ஓதுவாராகவும், பயன் சொல்பவராகவும் விளங்கியதுடன் சிறந்த பௌராணிகராகவும் வாழ்ந்தவர்.கீரிமலை நகுலேஸ்வரப் பெருமான் மீது புன்னாலைக்கட்டுவன் அப்பாசாமி ஐயரவர்களால் பாடப்பட்ட பதினொரு படலங்களையும், அறுநூற்றி இருபத்தெட்டு விருத்தப்பாக்களையுமுடைய நகுலகிரிப் புராணத்திற்கு உரையெழுதியவர். 1999-11-04 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.