1944 ஆம் ஆண்டு பிறந்தார். முனியப்பதாசன் என்னும் புனைபெயரில் எழுத்துலகில் அறிமுகமான இவர் 1964 ஆம் ஆண்டு கலைச்செல்வி சஞ்சிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் வெறியும் புலியும் என்ற சிறுகதையை எழுதி முதற்பரிசினைப் பெற்றார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி பயின்ற இவர் இச்சூழலிலேயே வாழ்ந்தவர். இவர் எழுத்துலகில் பிரவேசித்து 1967 ஆம் ஆண்டு வரையான மூன்றாண்டு காலப் பகுதிக்குள் இருபது சிறுகதைகள் வரை எழுதியுள்ளார். மிகக் குறுகிய மூன்றாண்டு காலத்திற்குள் அற்புதமானதும், தனித்துவமானதுமான சிறுகதைகளைத் தந்த இப்படைப்பாளி மூன்றாண்டு காலத்திற்குள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார். கற்றுணர்ந்த அனுபவங்களின் வெளிப்பாடாக இவரது படைப்புக்கள் அமைந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. ஆத்மீகத்தேர்தல், பிரவாகம், வெறுமையில் திருப்தி, சத்தியத்தின் குரல், அம்மா, மாவிலங்கை மரம், ஏழையின் ஆத்மா போன்ற சிறுகதைகள் அவரது படைப்பின் ஆளுமையை எடுத்துக் காட்டுவனவாகும்.