யாழ்ப்பாணம் சுழிபுரம் பொன்னாலை என்னும் இடத்தில் 1920ஆம் ஆண்டு பிறந்தவர். அண்ணா மலைப் பல்கலைக்கழகத்தின் வித்துவான் பட்டம்பெற்றவர். தமிழ்மரபு மாணவர் கட்டுரைகள்,செந் தமிழ்த்தேன், சிலம்பின் சிறப்பு முதலிய நூல்களை ஆக்கியவர். சாகித்திய மண்டலப்பரிசினைப் பெற்ற இவர் 1966 ஆம் ஆண்டு மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூர் நகரத்தில் நடைபெற்ற முதலாவது உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டில் இலங்கைப் பேராளராக ஆராய்ச்சிக்கட்டுரை சமர்ப்பித்தவர்.