1921-03-17 ஆம் நாள் வேலணையில் பிறந்து அளவெட்டி என்னும் இடத்தில் வாழ்ந்தவர். மாணிக்கப் பண்டிதர் என அழைக்கப்படும் இவர் கவிதை, கட்டுரை, கல்வெட்டுக்கள் இயற்றுதல், கதாப்பிரசங் கம், புராணப்படிப்பம் பயன் சொல்லுதலும் , நூலாக்கங்கள் எனப் பல வழிகளிலும் தமிழ் வளர்த்த பெருந்தகையாளர் .கந்தபுராணச் சுருக்கம், பெரியபுராணச் சுருக்கம், திருக்குறள் வசனச்சுருக்கம், நளவெண்பாக்களின் பதவுரை, புறநானூற்றில் சிந்தைக்கினிய செய்திகள் சில என்பன போன்ற நூல்களை வெளியிட்டவர். ஆயிரத்திற்குமதிகமான நினைவுக் கல்வெட்டுக்களையும், யாழ்ப்பாணத்து இந்து ஆலயங்கள் மீது திருப்பள்ளியெழுச்சிப்பாடல்கள், ஊஞ்சற் பாடல்கள், துதிப்பாடல்கள் என்பனவற்றையும் பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2003-03-27 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.