Thursday, January 16

சிவசண்முகமூர்த்தி, நடேசன்

0

சுழிபுரம் மேற்குப் பகுதியில் நடேசன், வள்ளியம்மை தம்பதியினரின் ஆறாவது பிள்ளையாக 1942 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் எட்டாம் திகதி பிறந்தார். இவரது தந்தை ஒரு மலாயன் பென்சனியர். இவருக்கு மூன்று ஆண் சகோதரர்களும் இரண்டு பெண் சகோதரிகளும் உள்ளனர். மூன்று வயதில் இவரது தந்தையிடம் தனது அடிப்படைக் கல்வியைப் பெற்றார். 1947 ஆம் ஆண்டு தொடக்கம் 1951 ஆம் ஆண்டு வரை சுழிபுரம் ஐக்கிய சங்க சைவ வித்தியாசாலையில் கல்வி கற்றார். கரவெட்டி கதிர்காம உபாத்தியாயர், கரவெட்டி கந்தவனம் உபாத்தியாயர், மூளாய் மயில்வாகனம் உபாத்தியாயர் மற்றும் சுழிபுரம் ஐயா உபாத்தியாயர் இவருக்கு இங்கு கல்வியைப் போதித்தனர். இவர் படித்த காலங்களிலே இப்பாடசாலையே மிகவும் புகழ்பூத்த ஆரம்பப் பாடசாலை ஆகும். இங்கு பஜனை, திருமுறை ஓதல், இசைநாடகங்கள், பேச்சுப்போட்டிகள் என பல்வேறு துறைகளைப் பற்றிய அனுபவ அறிவும், ஒழுக்கமும், கல்வியும் முறையாகப் போதிக்கப்பட்டது. இந்நிலையில் திருவாவடுதுறை ஆதீனத்தில் சமய சம்பந்தமான கல்வியிலும் பண்ணிசை ஓதுவதற்கும் சுழிபுரம் சிவலோகர் சேதுகாவலர் எனும் சைவப் புரவலர் விருப்பம் தெரிவித்தார். எனினும் சிறு வயதிலேயே பிள்ளையைப் பிரிந்து வாழப்போகிறோமே எனும் தயக்கத்தால் இவரது தந்தை மறுப்புத் தெரிவித் தார். கதாப்பிரசங்கியரான இவர் பல நாடுகளிலும் சென்று தனது கதாப்பிரசங்கங்களை நடத்தியுள் ளார். கதாப்பிரசங்கம் மட்டுமன்றி பண்ணிசை, நாட்டார் பாடல்களிலும் இவர் ஈடுபாடு கொண்டவர். புகழ்பூத்த சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் பழைய மாணவரும் முன்னாள் ஆசிரியரும் ஆவார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!