1873-08-08 ஆம் நாள் சிறுப்பிட்டி என்னும் ஊரில் பிறந்த இவர் பிதாகிங்ஸ்பெரி என அழைக்கப்பட்டார். பல்கலைக்கழகங்களில் தமிழ் கற்பித்த முதலாவது பேராசிரியர் இவராவார். சிறுப்பிட்டி சீ.வை. தாமோதரம்பிள்ளையவர்களின் புதல்வனாவார். கவிதை, நாடகம்,நூலாக்கம் ஆகியவற்றில் வெளிப்பாட்டுத்திறனுடைய இவர் இராமர்கதை, பாண்டவர்கதை,சந்திரகாசம், மனோன்மணியம் நாடகம் எனப்பல நூல்களை எழுதியவர். 1941-04-12 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.