மயிலங்கூடல் இளவாலையில் 1928-04-22 ஆம் நாள் பிறந்தவர். 18{1 , ஒன்பதாவது ஒழுங்கை, வாசன வீதி, கொழும்பு – 13 என்னும் முகவரியில் வாழ்ந்தவர். முப்பது வருடங்களுக்கு மேலாக ஆக்க இலக்கியத்துறையில் ஈடுபட்டுவரும் இவர் மல்லாகம் பண்டிதர் கழகத்தில் பயின்று பண்டிதர் பட்டம் பெற்றவர். அத்துடன் சென்னை சைவசித்தாந்த மகாசமாசத்தின் சைவப்புலவர் பட்டமும் பெற்றவர். ஆசிரியராயிருந்து முதலாந்தர அதிபராய் பணிபுரிந்து மயிலிட்டி அமெரிக்கன்மிசன் பாடசாலையை மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயமாகப் பாரிய வளர்ச்சி காணவைத் தவர். பழந்தமிழ் நூற்பயிற்சியுடன் நவீன இலக்கியக் கவிதைத்துறைகளிலும் ஈடுபாடு கொண்டவர். இலக்கண சந்திரிகை, வினைப்பகுபத விளக்கம் முதலான இலக்கண நூல்களையும், தண்டிகைக் கனகராயன் பள்ளு, பாரதி என்ற சஞ்சிகை, மழலைச் செல்வம் முதலான பலநூல்களையும் பதிப்பாசிரியராக இருந்து பதிப்பித்துள்ளார். பத்திற்கு மேற்பட்ட கவிதை, உரைநடை நூல்களையும் பத்திற்கும் மேற்பட்ட சிறுவர் பாடல்தொகுப்பு நூல்களையும் வெளியிட்டவர். நற்சிந்தனைகள் நாற்பது, அமுதமொழி, சைவசமய அபரக்கிரியை விளக்கம் நகுலேஸ்வரம், அறுபத்து மூவர், சைவசமய வாழ்வியற் சிந்தனைகள், மகத்துவ விரதங்கள் போன்ற உரைநடை நூல்களையும், மழலைச்செல்வம், மழலை வித்துக்கள், மழலைப் பாமலர்கள், மழலையர் பா அமுதம் போன்ற சிறுவர் பாடல் தொகுப்பு நூல்களையும், ஊஞ்சற் பாக்களையும் ஆக்கியவர். வலிகாமம் வடக்கின் காங்கேசன் கல்வி மலரின் கௌரவ ஆசிரியர்களில் முதன்மையானவர் மாவைமுருகன் மீது இதுவரை காலமும் எழுந்த இலக்கியங்களை அறிமுகம் செய்யும் வரலாற்று ஆவணமான மாவைக் கவிப்பூங்கொத்து என்னும் நூலை தனது தாயாரின் நினைவாக வெளியிட்ட பெருமைக்குரியவர். உலகளாவிய பல சஞ்சிகைகளில் சமய,தமிழ் ஆய்வுக் கட்டுரைகளை எழுதியவர். மரபுவழிச் செய்யுள் வகையில் ஒல்லுடை மும்மணிமாலை, கொட்டாஞ்சேனை வரதராச இரட்டை மணிமாலை, சதகம் முதலான கவிதை நூல்களையும் நற்சிந்;தனை நாற்பது எனற் வானொலி உரை நூலையும் ஆக்கியவர். இவரது இத்தகைய செயற்பாடுகளுக்காக இலங்கை கலாசார அலுவல்கள் திணைக் களத்தின் கலாபூ~ணம் விருதும், வடக்கு கிழக்கு மாகாண சிறந்த இலக்கிய நூற்பரிசும் வழங்கப் பெற்றவர். 2012-10-11 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.