திருநெல்வேலி கலாசாலை வீதியில்அமைந்திருக்கும் இக்கோயில் மிகவும் தொன்மை வாய்ந்ததாகும். ஆதி காலத்தில் ஓலைக்கொட்டிலாகக் காணப்பட்ட இவ்வாலயம் 1909 ஆம் ஆண்டு தீப்பிடித்து எரிந்ததாகவும் அதனை விநாயகர் அடியார் ஒருவரது கனவில் தெரியப்படுத்தி தீயை அணைப்பித்ததாகவும்பின்னர் ஓட்டினால் வேயப்பட்ட மடாலயமாக அமைக்கப்பட்டது. பின்னர் தி ருநெல்வேலி பெரிய நயினார் குடும்பத்தினர் மடாலயத்தினை புதுப்பித்து ஸ்தூபியினை அமைத்துக்கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து மூல விக்கிரகம் வவுனியாவிலிருந்து கொண்டு வரப்பட்டுபராபவ வருஷம் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டு 1966-06-08 இல் முதலாவது கும்பாபிசேகத்தினையும் 1983-05-18 இல் இரண்டாவது கும்பாபிஷேகத்தினையும் கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு வருடத்திலும் மாசி மாதத்தில் வருகின்ற அமாவாசை தினத்தன்று தீர்த்தோற்சவம் நடைபெறும் வகையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பதினாறுநாட்கள் மகோற்சவம் நடைபெறுவது வழக்கம்.