Saturday, June 22

வித்தியானந்தன். சு (பேராசிரியர்)

0

1924.05.08 ஆம் நாள் தெல்லிப்பளை- வீமன்காமத்தில் பிறநத்வர.; பேராதனைப் பல்கலைக் கழகத்தில் விபுலானந்த அடிகள் பேராசிரியர். க.கணபதிப்பிள்ளை, பேராசிரியர் வி.செல்வநாயகம் போன்ற பேரறிஞர்களிடம் பயிலும் வாய்ப்பைப் பெற்றவர். பேராசிரியர் க.கணபதிப்பிள்ளையவர் களிடமிருந்தே பேராசிரியரவர்கள் ஆராய்ச்சித் திறமை, கலை ஈடுபாடு, கற்பிக்கும் ஆற்றல் என்பவற்றைப் பெற்றுக் கொண்டார். 1948இல் லண்டன் பல்கலைக்கழகத்தில் பத்துப்பாட்டு, வரலாறு-சமூகவியல் மொழியியல் நோக்கு என்னும் பொருளில் கலாநிதிப்பட்டம் பெற்றவர். ஆங்கிலத்தில் அமைந்த இக்கட்டுரையை தமிழில் தமிழர்சால்பு என்ற அரிய நூலாக 1954இல் வெளியி;ட்டு முதலாவது பண்பாட்டாய்வாளராக மிளிர்ந்தவர். 1963இல் ஆராய்ச்சித் துறைத் தலைவராகவும்,1970 இல் பேராசிரியராகவும் பதவியுயர்வுகள் பெற்றவர். 1977 இல் யாழ்ப்பாணவளாகத் தலைவராகவும், 1979 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உருவாகியபோது அதன் முதலாவது துணைவேந்தராகவும் பதவி வகித்தவர். தமிழ்த் துறையிற் தலைமை தாங்கிய பேராசிரியர் கலைத்துறையிலும் பேரார்வமுடையவராக விளங்கினார். பாரம்பரியக் கலை வடிவமான நாட்டுக் கூத்தினை பல்கலைக் கழக மட்டத்தில் அறிமுகம் செய்து பல்கலைக்கழக மாணவ மாணவி களைக் கொண்டு விடிய விடிய ஆடிய கூத்தை சுருக்கி காலத்திற்கேற்ற வகையில் மரபுகெடாமல் களரி ஏற்றியவர். வடமோடி, தென்மோடிக் கூத்துக்களுடன் பேராசிரியரவர்கள் நிற்கவில்லை. இக்கலை பற்றிய ஆராய்ச்சி அரங்குகளை நாட்டின் பல பகுதிகளிலும் நடத்தினார். அண்ணாவி மாரைக் கௌரவிக்கும் மாநாடுகளை நடத்தியதுடன் கலைமகிழ்னன் என்ற புனைபெயரில் மறைந்து நின்று பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் எழுதியவர். இவருடைய அறிவாற்றலையும், கலைத் திறமையையும் அறிந்த கலை நிறுவனங்களான இலங்கைக் கலைக்கழக தமிழ் நாடகக்குழு, இலங்கை சாகித்திய மண்டலம், இலங்கை தேசிய நாடக நூற்கட்டளை நிறுவனம், ஐ.நா. கல்வி, கலை, விஞ்ஞான நிறுவனத்தின் இலங்கைக் குழு ஆகியன உறுப்பினராக்கியும், தலைமைப் பதவிகளை வழங்கியும் இவரது செயலாற்றலைப் பயன்படுத்திக் கொண்டன. இவர் பல்கலைக்கழக மாணவர்களைக் கொண்டு அரங்கேற்றிய கர்ணன்போர், நொண்டிநாடகம், இராவணேசன், வாலிவதை போன்ற நாடகங்கள் குறிப்பிடத்தக்கன. அதுமட்டுமன்றி ஏட்டுச்சுவடிகளாக இருந்த கூத்துக்களான வாழபீமன், மார்க்கண்டேயர், பதினெட்டாம் போர் போன்ற பல்வேறு கூத்துச் சுவடிகளை நூலாக்கம் செய்து ஆவணப்படுத்தியவர். அண்ணாவிமார் மாநாடுகளையும், நவீன நாடகக் கருத்தரங்குகளையும், நவீன நாடகப்போட்டிகளையும் நடத்தியதனூடாக நாடகக்கலை வளர்ச்சியில் பெரிதும் பங்காற்றியவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நாடகமும் அரங்கியலும் என்ற பாடத்தினை ஆரம்பித்து இன்றைய யாழ்ப்பாணத்து அரங்க வளர்ச்சிக்கு அடிகோலியவர் என்ற பெருமையும் இவரையே சாரும். தமிழர்சால்பு, நாடகம் நாட்டாரியற் சிந்தனைகள், கலையும் பண்பும், தமிழியற் சிந்தனைகள் ஆகிய நூல்களை வெளியிட்டவர். 1984இல் வித்தியானந்தம் துணைவேந்தர் வித்தி, அரங்கு கண்ட துணைவேந்தர், கலைமகிழ்நன் முதலான நூல்கள் பேராசிரியரவர்களைப் பற்றியதாக பல்வேறு அறிஞர்களாலும் எழுதப்பெற்றனவாகும். நடிகமணி வீ.வீ.வைரமுத்துவினது பார்சி வழி முறையில மைந்த அரங்கச் செயற்பாடுகளை பல்கலைக்கழக மட்டத்தில் அரங்கேற்றியது மட்டுமல்லாமல் இலங்கை ரூபவாகினிக் கூட்டுத்தாபனத்தின் துணையுடன் ஒலி, ஒளிப்பதிவு செய்து ஆவணப்படுத் தியதுடன் இக் கலைவடிவத்தின் பெருமையை உலகறியவும் வைத்தவர். 1989.01.22 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!