இக்கோயில் அமைந்துள்ள பெரியவளவு பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரைசோலையாக விளங்கியது. அச்சோலையிலுள்ள ஒரு விருட்சத்தின் கீழ் விநாயகப்பெருமான் அமர்ந்து அருள்பாலித்து வந்தார் அக்காலப் பகுதியில் இவ்வூரில் வாழ்ந்த பல சித்தர்கள் விநாயகப்பெருமானின் அருளால் பல சித்துக்களைப் பெற்றார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இவ்வூரில் வாழ்ந்த மழவராயர் குடும்பத்தினர் விநாயகப்பெருமானுக்கு ஒரு கோயில் கட்டி சைவாகம முறைப்படி பூசைமுறைகளை ஆரம்பித்து வைத்தார்கள்.1898 ஆம் ஆண்டில் இக்கோயிலின் முக்கிய பகுதிகளை மட்டக்களப்பு திரு.கா.வைத்தியலிங்கம் கருங்கல்லினால் விசாலமாகக் கட்டுவித்தார்.1912 ஆம் ஆண்டில் மகாகும்பாபிசேகம் நடைபெற்றது.1940 இல் இக்கோயிலை நிர்வகிப்பதற்கு பரிபாலன சபை உருவாக்கப்பட்டது.