வேலணை மேற்கில் பெரியபுலம் என்னும் இடத்தில் அமைந்திருப்பதனா ல் இவ்வாலயம் பெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் கோயில் என அழைக்கப்படலாயிற்று. ஆனாலும் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலத்தில் இக்கோயிலானது சைவக்கோயில் களின் அழிப்புக ;கைவரிசைக்குட்படாமல் முடியோடு நித்திய,நைமித்திய பூசைகளை நிகழ்த்திவந்தமையால் முடிப்பிள்ளையார் என்ற சிறப்புப் பெயரினையும் பெற்றவர். ஆவணிச் சதுர்த்தியை பெரிய திருவிழாவாக ஊர்மக்கள் ஒன்றுசேர்ந்து நடத்தி வந்தனர்.1970 ஆம் ஆண்டிலிருந்து இத்தினத்தில் பத்து நாட்கள் அலங்காரத் திருவிழாவினை நடத்தி வருகின்றமை இவ்வாலயத்தின் சிறப்பம்சமாகும்.