காங்கேசன்துறை வீதி மல்லாகம் சந்தியில்அமைந்துள்ள இக்கோயில் விநாயகர், முருகன் ஆகிய கடவுளர்களுக்கு ஒரே கூரையின் கீழ்ஆலயங்களைத் தனித்தனியாக அமைத்துவழிபடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். ஒவ்வொரு வருடத்திலும் சித்திரை மாதத்தில் விநாயகருக்கும்,ஆவணி மாதத்தில் முருகனுக்கும் கொடியேற்றத் திருவிழாவு டன் ஆரம்பமாகி தொடர்ந்து 10 தினங்கள் மகோற்சவம் நடைபெறுவது வழக்கம். பிள்ளையார் கோயில்,வாரிவளவு காரைநகர் காரைநகர் மேற்கில் வாரிவளவு என்னும் குறிச்சியில் அமைந்திருக்கும் இவ்வாலய மானது சுப்புடையார் என்னும் பரம்பரையினர் 1880 ஆம் ஆண்டு தொட்டு சிறுகொட்டிலாக அமைத்து வழிபட்டனர். 1972 ஆம்ஆண்டு தொடக்கம் ஈ.வி .கா ர ;த்திகேசு,ந.கணபதிப்பிள்ளை, சி.சிவஞானம் ஆகிய மூவரைக்கொண்ட குழுவினரிடம் நிர்வாகப் பொறுப்பு கையளிக்கப்பட்டது. தற்பொழுது சிவஞானம் அவர்கள் மிகச்சிறப்பாக செயற்படுத்தி வருகின்றார்.காரைநகரில் 1982இல் இராஜகோபுரம் அமைக்கப்பட்ட முதலாவது கோயில் என்ற பெருமையைப் பெற்றதாகும்.சித்திரைப் புதுவருட தினத்தில் இரதோற்சவம் நடைபெறும் வகையில் பத்துத் தினங்கள் பெருந்திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.