இணுவில் பரராஜசேகரப்பிள்ளையார் கோயில் இலங்கை, இணுவில் தெற்கிலுள்ளமடத்துவாசலில் அமைந்துள்ளது. இக்கோயில் காங்கேசன்துறை வீதியில், யாழ்ப்பாண நகரத்தில் இருந்து ஏறத்தாழ 7 கிலோ மீற்றர்கள் தொலைவில் அமைந்துள்ள இணுவில் சந்தியில் இருந்து மேற்கு நோக்கி மானிப்பாய்க்குச் செல்லும் வீதியில் அமைந்துள்ளது. போர்த்துக்கேயர் யாழ்ப்பாண இராச்சியத்தை 1620ஆம் ஆண்டில் கைப்பற்றுவதற்குமுன் அதை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்தில் தோற்றம் பெற்றதாகக் கருதப்படும் இந்தக் கோயில் யாழ்ப்பாணத்தில் உள்ள மிகவும பழைய கோயில்களுள் ஒன்று. இக்கோயிலின் சிற்ப ஓவிய வேலைப்பாடுகள் ஒரு சிறப்பான அம்சமாகும். 13 ஆம் நூற்றாண்டு முதல் 17 ஆம்நூற்றாண்டின் தொடக்கம் வரை யாழ்ப்பாணத்தை ஆரியச் சக்கரவர்த்தி வம்சத்தினர் ஆண்டனர். இவர்கள் பரராசசேகரன்,செகராசசேகரன் என்னும் சிம்மாசனப் பெயர்களைமாறிமாறி வைத்துக்கொண்டனர். இவர்களில்பரராசசேகரன் என்ற சிம்மாசனப் பெயரைக்கொண்ட ஒரு மன்னனின் பெயராலேயே இக்கோயிலில் உள்ள பிள்ளையாருக்கு பரராசசேகரப் பிள்ளையார் என்றும், கோயில் பரராசசேகரப்பிள்ளையார் கோயில் என்றும் அழைக்கப்பட்டது என்று நம்பப்படுகிறது. அம்மன்னன் இக்கோயிலைக் கட்டுவித்ததால் அப்பெயர் ஏற்பட்டது என்றும், அவன் வணங்கி வந்த கோயில் ஆதலால் அவன் பெயரால் கோயில் அழைக்கப்பட்டது என்றும் கருத்துக்கள் நிலவுகின்றன. ஆங்கிலேயர் 1796 இல் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய பின்னர் வழிபாட்டுச ;சுதந்திரம் கிடைத்தது. 1800களில் பழைய கோயில் கட்டடம் திருத்தப்பட்டுக் குடமுழுக்கும் இடம்பெற்றதாகத் தெரிகிறது. இக்காலத்தில், கருவறையுடன், அர்த்த மண்டபம், மஹா மண்டபம் ஆகியவற்றையும் கொண்டிருந்த இக்கோயில் சிறியதாக இருந்தது. அக்காலப்பகுதியில் பூசைகள் ஒழுங்காக நடைபெற்று வந்ததுடன், திருவிழாக்களும் இடம்பெற்றதாகஅறிய முடிகின்றது. 1928 ஆம் ஆண்டுக்குப்பின்னர் மீண்டும் திருத்த வேலைகளும், புதிய கட்டடவேலைகளும் இடம்பெற்றன. 1939இல்குடமுழுக்கும் செய்யப்பட்டது. இதன் பின்னரும்பல தடவைகள் திருப்பணி வேலைகள் இடம்பெற்றுக் கோயில் விரிவாக்கப்பட்டது. தற்போது பல மண்டபங்கள், இராஜ கோபுரம், மணிமண்டபம் என்பவற்றைக் கொண்டதாக இக்கோயில் விளங்குகின்றது.