சாவகச்சேரி மீசாலையில் அமைந்திருக்கும் இக்கோயிலானது 250 வருடங்கள்கடந்த வரலாற்றினைக் கொண்டுள்ளது.டச்சுக ;காரர்களின் வருகைக்கு முன்பேஇவ்வூர் மக்களால் வழிபடப்பட்டு வந்த ஆலயமானது மதசுதந்திரம் மறுக்கப்பட்ட நிலையில் விக்கிரகங்கள் ஆலய வளவில் காணப்பட்ட வெள்ளை மாமரத்தின்கீழ் புதைத்துமானசீகமாக வழிபட்ட நிலையில் பலகாலம் சென்றதனால் வழிபாடுகள் நின்றுவிட்டன.காலப்போக்கில் முத்தன் என்ற விவசாயி சந்திரகுமரேசபுரம் என்ற பெயருடைய இக்காணியைத் துப்பரவுசெய்த வேளையில் வெள்ளை மாமரத்தினடியில் கொத்தும்போது பெரியதொரு திருநீலகண்டன் ஒரு துவாரத்தின் வழியே சென்றது. இவ்விசஜந்தினைக் கொல்வதற்காக மீண்டும் இவ்விடயத்தில் கொத்தியபோது ஒரு கல்லில் பட்டு இரத்தம் வடியத் தொடங்கியது. முத்தன் பயத்தினால் தனது குடிசைக்குச்சென்று உறங்கினான். அன்று இரவு அவனது கனவில் தோன்றிய விநாயகப்பெருமான்“துன்பப்படாதே அவ்விடத்தில் ஒரு மூர்த்திஇருக்கிறது. அதை எடுத்து நீராட்டி அந்த மாவடியில் வைத்து நீ உண்ணும் உணவை எனக்குநிவேதித்து பின் உண்பாயாக” என்று திருவாய் மலர்ந்தருளினார். மறுநாட் காலையில் முத்தன் அப்படியே செய்துவிட்டு காணியின் உரிமையாளரான முகமாலையில் வாழ்ந்த கேயரத்திமுதலியாரிடம் விடயத்தினை விளக்கினான். முதலியார் அவ்விடம் வந்து பார்த்து சிறுகொட்டிலமைத்து அதிலே அந்த மூர்த்தியை பிரதிஷ்டைசெய்து திருநீலகண்ட வெள்ளை மாவடிப்பிள்ளையார் என அழைத்தார். காலப்போக்கில் ஊர் மக்களின் பங்களிப்போடு கோவில் இன்றைய வளர்ச்சியினை அடைந்ததெனலாம்.ஒவ்வொரு வருடத்திலும் ஆடி அமாவாசை வந்து ஆறாம் நாள் கொடியேற்றத்துடன் ஆரம்பித்து பத்தாம் நாள் பௌர்ணமி தினமன்று தீர்த்தோற்சவத்துடன் மகோற்சவம் நிறைவடைவது வழக்கம்.