Wednesday, March 12

தலம்காவல் பிள்ளையார் கோயில் – திருநெல்வேலி

0

திருநெல்வேலியின் மையப் பகுதியாகியஅம்மன் வீதியின் மேற்குப் பக்கத்தில் அமைந்துள்ள இக்கோயில்; கி.பி. 1241 – கி.பி. 1621காலப் பகுதியாகிய தமிழரசு காலத்தில் நல்லூர் ராஜதானியின் பாதுகாப்பிற்காக ராஜதானியைச் சூழவுள்ள பகுதிகளில் காவல் தெய்வங்களாக அமைக்கப்பட்ட விநாயகர் ஆலயங்களில் ஒன்றாகக் கொள்ளப்படுவதாக வரலாற்றுச் செய்திகள் கூறுகின்றன. 1840ஆம் ஆண்டில்இவ்வாலயத்திற்கு சில அடியார்களால் தர்மசாதனமாகக் கொடுக்கப்பெற்ற காணி உறுதியில்ஸ்ரீ காயாரோகண மூத்தநயினார் என்றபெயர் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. ஆனால் தமிழரசு காலத்தில் எழுந்த ஆலயத்தின் நிலை என்ன  வென்று சொல்வதற்கு முடியாமலுள்ளது. 1918 ஆம் ஆண்டு இவ்வூரின் பெரியவர் ஒருவரதுபணியினால் கல்லினால் கர்ப்பக்கிருகம், அர்த்தமண்டபம், மகாமண்டபம் ஆகிய மூன்றும் கட்டப்பெற்று ஊர்மக்களது உதவியுடன் மஹாகும்பாபிஷேகம் நடத்தப்பெற்றது. 1934 ஆம் ஆண்டு மகோற்சவம் ஆரம்பிக்கப்பட்டது. ஒவ்வொரு வருட ஆனி மாதத்தில்வரும் சதயத் திதியில் தீர்த்தோற்சவம் நடைபெறும் வகையில் கொடியேற்றத் திருவிழாவுடன் ஆரம்பமாகி தொடர்ந்து 18 தினங்கள் மகோற்சவம் நடைபெறுவது வழக்கம்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!