இற்றைக்கு இருநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட இவ்வால யம் மரத்தடிப் பிள்ளையார் கோயில் என அழைக்கப்பட்டு வந்தது. 1920 ஆம் ஆண்டளவில் கோயிலுக்கு வெளிவீதி அமைத்து விஸ்தரிக்கப்பட்டுள்ளது. கண்ணைக்கவரும் அழகிய சுதைசிற்பங்கள் பொலிவுறஅமைக்கப்பட்டு 1976 ஆம் ஆண்டு இறுதியிலே மஹா கும்பாபிகேம் நடத்தப்பட்டு. ஆரம்ப காலங்களில் பத்து நாட்கள் அலங்காரத்திருவிழா நடைபெற்று வந்தது. தொடர்ச்சியான புனராவர்த்தன நடவடிக்கைகளின் பின்னர் 2005 ஆம் ஆண்டு வேலைகள் பூர்த்தியாக்கப்பட்டு மகாகும்பாபிகேம் நிறைவேறியது. அன்றிலிருந்து பதினைந்து நாட்கள் மகோற்சவம் நடைபெறுவது வழக்கம்.