Sunday, October 6

சொக்கவளவு சோதி விநாயகப் பெருமான் – கோயில் – குப்பிளான்

0

நல்லைநகர் நாவலரின் கல்வி மரபு வழித்தோன்றல் காசிவாசி செந்திநாதையரின் முறைசந்ததியினர் காலத்தில் ஆரம்பமாகின்றது. முற்காலத்தில் இவ்வாலயம் அமைந்துள்ள இடம் தெய்வீக விருட்சங்கள் நிறைந்தவனமாக விளங்கியது. இவ்வாலயத்தைச் சூழ சை வத் தமிழ்க்குடிகளும், வேதசிவாகம ஒழுக்கநெறியிலும் தலைசிறந்த அந்தணர்களும் வாழ்ந்துள்ளனர். தெய்வீக மரங்களின் நடுவே கனிதரும் மரமாகிய பலாமரத்தின் கீழ் விநாயகப்பெருமானுக்கு மண்ணால் மடாலயம் அமைத்து வழிபட்டு வந்தார்கள். 1927 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இவ்வாலய வளர்ச்சிக்காக இவ்வூரைச் சேர்ந்த சைவப் பற்றாளர்கள் இருபத்தைந்து பேரைக்கொண்டதாக தர்மகர்த்தாக்கள் சபை அமைக்கப்பட்டு ஆலயத்தின் வள்ர்ச்சிக்காக பாடுபட்டு வந்தனர். இச்சபையினரின் முயற்சியால் 1927 ஆம் ஆண்டின் இறுதிக்காலத்தில் தென்னங்கீற்றினால் கூரையும், கற்சுவர் கொண்ட மடாலயம் கட்டியெழுப்பப்பட்டது. பின்னர் ஆகமவிதிப்படி கோயிலமைப்பதற்கான முயற்சியிலீடுபட்டு 1940இல் இப்பணி நிறைவுற்று மஹாகும்பாபிN~கம் நடைபெற்றது. ஒவ்வொரு வருடத்திலும் ஆனிமாதத்தில் வருகின்ற அமாவாசையை தீர்த்தோற்சவ நாளாகக்கொண்டு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி பன்னிரண்டு நாட்கள் மகோற்சவம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!