Wednesday, May 29

சித்தி விநாயகர் கோயில் மாயக்கை, அல்வாய்

0

வடமராட்சிப் பகுதியில் பாணன்குடியிருப்பு,குறநங்கை வாழி, மாலிசந்தை, அல்வாய்,வியாபாரிமூலை, தம்பசெட்டி இடங்களுக்கு நடுவனாக இருப்பது மாயக்கை என்னும் நீர்த்தேக்கமாகும். இத்தகைய பகுதியின் வடகொடியில் சிவன் எழுவை என்னும் நிலத்தில் பழமை வாய்ந்த சிவாலயம் ஒன்று இவ்வூர் மக்களால் வழிபாடு செய்யும் பிரதான தலமாக விளங்கியது. போர்த்துக்கேயரின் சைவாலய அழிப்பின் காரணமாக இச்சைவாலயம் அழிக்கப்பட்டு இங்குள்ள விக்கிரகங்களை களவாடிக்கொண்டு சென்றவேளை அவ்விக்கிரகங்களில் ஒன்றாகிய விநாயகர் திருவுருவம் அவர்கள் கண்ணுக்குப் புலப்படாது மாயமாக மறைந்து நிலத்தில் புதையுண்டது. காலப்போக்கில் சிவாலயம் இருந்த இடத்திற்குக் கிழக்கே சிறிது தூரத்தில் தினை பயிரிடப்படும் புன்செய் நிலத்தில் அந்நிலச் சொந்தக்காரரும் ஐயன் பிரிவைச் சேர்ந்தவருமான நீலப்பிள்ளை என்பவர் தான் செய்கை பண்ணிய தினைப்பயிருக்கு நீர் பாய்ச்சியபோது தினைப்பயிரினுள்ளே விநாயகர் திருவுருவம் திடீரென ஒளிமயமாகத ; தோறற் மளிதத் து. இதத்திpருவுருவம் தோன்றய அதே இடத்தில் சிறுகுடில் அமைத்து விநாயகப்பெருமானை வைத்து வழிபட்டு வந்தார். சிலநாட்களில் மண்ணினால் சுவர் வைத்துசிறிய ஆலயமாக்கினார். நீலப்பிள்ளை வேதாரணிய வழிவந்த சபாபதிதேசிகரை பூசகராக நியமித்தார். இவர்களின் மறைவின்பின்னர் ஆழ்வாப்பிள்ளை ஆலயத்தினை பரிபாலனம் செய்த காலத்தில் சபாபதிதேசிகரின் மகன் சிவசுப்பிரமணிய தேசிகர் பூசகராகி மடிப்பிச்சையேற்று ஆலயத்தின் கர்ப்பக்கிரகம், அர்த்தமண்டபம் ஆகிய இரு மண்டபங்களையும் வைரக்கற்களால் அமைத்து கும்பாபிசேகம் நிறைவேற்றினார். இதன் காரணமாக ஆழ்வாப் பிள்ளையவர்கள் குறித்த பூசகருக்கு பூசை உரிமையும் அங்கு நடைபெறவேண்டிய நித்திய, நைமித்திய கிரியா நடைமுறைகளை ஒழுங்கு செய்யும் அதிகாரத்தினை சுப்பிரமணி தேசிகராகிய பூசகருக்கும் அவரின் சந்ததியினருக்குமே உரியதென ஓர் ஆவேதனம் நிறைவேற்றிக் கொடுத்துள்ளார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!