இவ்வாலயத்திற்கான விக்கிரகத்தினை இந்தியாவில் கொள்வனவு செய்தனர் என்றும் கொள்வனவு செய்யச் சென்றவேளை பலவிக் கிரகங்களின் மத்தியில் இங்கிருக்கும் விக்கிரகமானது அசைந்து முன்வந்தது என்றும் அதை கொள்வனவு செய்து நெல்மூடைக்குள் வைத்துக்கொண்டு வந்தவேளை சுங்கப் பகுதியினரின் சோதனையில் நெல்லும்கல்லும் தானிருக்கின்றது என்று சொல்லியபோது சோதனையின்றி விடுபட்டதாக ஒருசாராரும், வன்னியிலிருந்து வரும்போது நானும் வருகின்றேன்என்ற சத்தம் கேட்க சென்று பார்த்தபோது இவ்விக்கிரகம் பற்றைப் பகுதியிலிருந்து அசைந்து வந்ததாகவும் அதனை நெல்மூடைக்குள் வைத்துகொண்டு வரும்போது ஆனையிறவுச் சோதனையில் நெல்லும் கல்லும்தானிருக்கின்றது என்று சொல்ல சோதனையின்றிவிடுபட்டதாகவும் இவ்வூரைச் சேர்ந்த வீரகத்திப்பிள்ளை என்பவரே இவ்விக்கிரகத்தினைக் கொண்டு வந்து இவ்வாலயத்தினை அமைத்ததாகவும் கருத்துக்கள் நிலவுகின்றன.