Wednesday, October 30

சந்திரசேகரப்பிள்ளையார் கோயில் – உப்புமடம், கோண்டாவில்

0

1834 ஆம் ஆண்டு வடலிசீமா என்னும் பெயருடைய காணியில் வைகாசி மாதம் சங்கர ஐயர் தனது சொந்தக்காணியில் இவ்வாலயத்தினை ஆரம்பித்தார். அக்காலத்தில் மன்னன் செகராஜசோழர் உதவியுடன் இந்தியாவிலிருந்து விநாயகர் விக்கிரகத்தினைக் கொண்டுவந்து பிரதிஷ்டை செய்து ஆரம்ப காலத்தில்ஒரு நேரப் பூசையுடன் வழிபட்டு வந்தார். பின்னர் படிப்படியாக வளர்ந்து 1977 இல் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி வைகாசி விசாகத்தில் தீர்த்தோற்சவம் நடைபெறும் வகையில் பத்து நாட்கள் மகோற்சவம் செய்யும் பாரம்பரியம் ஆரம்பமானது. 2012 இல் பாலஸ்தானம் செய்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதிலிருந்து மகோற்சவமானது இரண்டு நாட்கள் அதிகரித்து பன்னிரண்டு நாட்களாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்திலிருந்து இன்று வரை எட்டாவது சந்ததியாய் சிவஸ்ரீ சாமி சிறிஸ்கந்தக் குருக்கள் இவ்வாலயத்தினை பராமரித்து வருகின்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!