துஃ113 நல்லூர் வடக்கு, கல்வியங்காட்டில் அமைந்துள்ள இ வ்வாலயம் 17ஆம் நூற்றாண்டில் ஸ்தாபிக்கப்பட்ட எட்டு விநாயகர் ஆலயங்களில் ஒன்றாகும். விருட்சங்களில் சிறப்பானதும் யாகங்களுக்கு மிக முக்கியத்துவமானதுமான “பொரசு” என்று அழைக்கப்படும் “பாலாச” மரங்களால் சூழப்பெற்றதும் தென்கிழக்கே தாமரை, ஆம்பல், நீலோற்பலம் முதலிய மலர்கள் நிறைந்த தடாகத்தையும் கிழக்கே வயல்களையும் கொண்ட அழகிய சூழலில் அமைந்துள்ளது. மூலவிக்கிரகமாக விநாயகரும் பரிவார மூர்த்திகளாக வள்ளி தெய்வயானை சமேத முருகன், மஹாலட்சுமி, சந்தானகோபாலர், வைரவர், சண்டேஸ்வரர் ஆகியன உள்ளன. அனைத்து மண்டபங்களையும் கொண்ட இக்கோயில் சித்திரை வருடப்பிறப்பன்று தேர்த்திருவிழா நடைபெறும் வகையில் 10 நாட்கள் மகோற்சவம் இடம்பெறுகிறது. ஏனைய நித்திய, நைமித்திய பூசைகளும் சிறப்பாக இடம்பெறுகிறது. தலவிருட்சமாக வில்வ மரம் அமைந்துள்ளது.