வரணி கரம்பைக்குறிச்சி கிழக்கில் அமைந்திருக்கும் இக்கோயிலானது பலநூறு வருடங்கள்பழமை கொண்டதாகவும் பெரிய குளத்திற்கருகில் அமைந்திருப்பதும் இதன் சிறப்புக்களாகும். அக்காலத்தில் பயணம் செய்யும் அரச அதிகாரிகளின் பல்லக்கை இவ்வாலயத்தில் அமைந்திருந்த ஆலமரம் பல்லக்கின் முடியைத்தட்டி உடைத்ததனால் கொம்புதட்டிப் பிள்ளையாராலயம் என அழைக்கப்படலாயிற்று என்கின்றனர்.