வல்லிபுரக் குருக்கட்டு சித்திவிநாயகர்கோவில் 1850 ஆம் ஆண்டளவில் வல்லிபுரக் குறிச்சியைச் சேர்ந்த தானத்தார் என்னும்பரம்பரையினர் குறிக்கட்டு என்னும் காணியில்விநாயகரை ஒரு கொட்டில் அமைத்து வழிபாடுசெய்துவந்தனர். இதன் ஆதிகர்த்தாக்களாகவேலர்சேதர், நினைவர்தாமர், நாகப்பர் நாராயணபிள்ளை போன்றோர் இருந்தனர். மேற்படிஆலயத்திற்கு மேற்குப் புறமாக தீர்த்தக்குளமும், அதற்குத் தெற்குப் பக்கமாக நாமக்குளமும்அமைக்கப்பட்டன. இந்நாமக் குளத்திலிருந்து வல்லிபுர ஆழ்வார் சுவாமி கோயிலுக்கு நாமம்எடுத்துச் செல்வது வழக்கம். இதனால்தான் இக்குளத்தினை நாமக்குளம் என அழைத்தனர். இவ்வாலயத்தின் மேற்கிலுள்ள தீர்த்தக்கேணியில் நீராடி வழிபட்டால் நோய்கள் விலகும்என்ற நம்பிக்கை இன்றும் நிலவிவருகின்றது.மேற்படி குளம்1952ஆம் ஆண்டளவில் கேணியாக அமைக்கப்பட்டது. இக்கேணியிலேயேஆதி காலத்தில் வல்லிபுர ஆழ்வார் சுவாமிகோயிலின் கேணித் தீர்த்தமும் மாமாங்கத்தீர்த்தமும் நடைபெற்றுவந்தது. வல்லிபுரஆழ்வார் சுவாமி கோவிலில் விநாயகரைஅமைப்பதற்கு முன்னர் இவ்விநாயகரைவழிபடுவது வழக்கமாக இருந்து வந்தது.ஆரம்பத்தில் இவ்விரண்டு கோயிலுக்கும்பூசகராக தானத்தார் வழியினரே இருந்துவந்தனர். வல்லிபுர ஆழ்வார் கொடியேற்றத்திற்கு மூன்று நாளுக்கு முன்னர் இவ்விநாயகர் கொடியேற்றம் நடைபெறும்.