மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்புதோன்றிய இவ்வாலயம் குப்பிளான் ற்கும் நீண்டகாலமாகவர்த்தகத் தொடர்புகள் இருந்து வந்துள்ளன.மன்னாரிலிருந்து மாட்டு வண்டிலில் வியாபாரப்பொருட்களுடன் வந்தவர்கள் கூடவே மூன்றுபிள்ளையார் விக்கிரகங்களையும் கொண்டுவந்தார்கள். இவற்றில் ஒன்றினை நீர்வேலி வாய்க்காற்தரவைப் பிள்ளையார் கோயிலிலும்,மற்றையதை புன்னாலைக்கட்டுவன் ஆயக்கடவைப் பிள்ளையார் கோயிலிலும், பிரதிஷ்டைசெய்தார்கள். மூன்றாவது விக்கிரகத்தைகுப்பிளான் கற்கரைப் பகுதியில் பிரதிஷ்டைசெய்தார்கள். நூறு வருடத்திற்கு மேல் மகோற்சவம் நடைபெறும் கோயிலாகக் குப்பிளானில்விளங்கும் இவ்வாலயம் தமிழ் வேதமாகியபன்னிரு திருமுறைகளுக்கு முக்கியத்துவம்கொடுத்து திருமுறைச் செல்வர்களுக்கு ஆலயத்தினுள்ளே கோயில் அமைக்கப்பட்டிருப்பது வேறெங்கும் காணமுடியாத அம்சமாகும்.மகோற்சவத்தின் ஆறாம் திருவிழா திருமுறைவிழாவாகவே இடம்பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. கூழவாய் சுப்பிரமணிய சுவாமிகள்,திருமுருக கிருபானந்தவாரியார் ஆகியோர் இவ்வாலயத்திற்கு வருகைதந்து அருளாசிவழங்கியுள்ளார்கள். 1984 ஆம் ஆண்டில்திருமுறை மாநாடு ஆலய முன்றலில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. 2016 ஆம் ஆண்டுகும்பாபிஷேகம் நடைபெற்றது.